தேவமுகுந்தனின்; 'கண்ணீரினூடே தெரியும் வீதி'-
குறியீடாகி இருக்கும் தமிழ் இளைஞனின் வாழ்வு
-மேமன்கவி-
அச்சக்லையின் வருகையும் உரை நடையின் தோற்றமும் இலக்கியத்தை உள்; வாங்கும் முறைமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாற்றம், பிற்காலத்தில் எதிர்; கொள்ளப்பட்ட பல்விதமான கோட்பாடுகளான அமைப்பியல், பின்-அமைப்பியல்;, கட்டவிழ்ப்பு, பின்-நவீனத்துவம் ஆகியவற்றினால் மொழியில் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஊடாக எல்லா வகையான பிரதிகளும்; கட்டவிழ்ப்பு வழியாக புதிய வாசிக்குப்புக்கு உட்படுத்தியது.
அந்த வகையில் ஒரு சிறுகதைத் தொகுப்பினையோ,கவிதைத் தொகுப்பினை பயிலத் தொடங்கும் பொழுது, அத்தொகுப்புகளில் அடங்கியுள்ள படைப்புக்கள், எழுதப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளனவா? என்ற தேடலுடன் பயிலப்படுவதுண்டு.அவ்வாறான தேடலுக்கான காரணம,; அப்படைப்புக்களுக்கான படைப்பாளியின் ஆக்கத் திறன், கருத்துநிலை போன்றவற்றின் படிமுறை வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ளத்தான் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், படைப்பாளி தொகுத்து தந்த வரிசையை குலைத்து ஒரு புதிய வரிசையை வாசகப் பார்வையில் உருவாக்கி, (இங்கு நாவல் ஒன்றில் அத்தியாயங்களை வரிசை மற்றுதலாக இருக்கும்) புதிய வாசிப்புக்காக கட்டவிழ்க்கின்ற அத்தருணத்தில் படைப்பாளி தன் படைப்புத் தொகுப்புக்குள் வெளிப்படுத்தும்; கருத்து நிலைக்கு மாறான, அல்லது படைப்பாளி எண்ணிராத ஒரு கருத்து நிலையை வாசகப் பார்வை உருவாக்க கூடும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலே வாசகப் பிரதியின் உருவாக்கம் நிகழ்கிறது.
காலச்சுவடு வெளியிடாக வெளிவந்திருக்கும் தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' எனும் தொகுப்பில், அவர் தொகுத்து தந்திருக்கும் வரிசையில், அத்தொகுப்புக்குள் அடங்கி இருக்கும் கதைப் பிரதிகளை முதல் வாசிப்பில் அத்தியாயங்களை குலைந்து போன ஒரு நாவலை வாசித்து முடித்த ஒர் உணர்வே எனக்கு ஏற்பட்டது. இப்பொழுது நான் ஒரு வாசகனாக அத்தொகுப்புக்கான கதைப் பிரதிகளை, அப்பிரதிகளில்; சித்திரிக்கபட்ட சம்பவங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, அப்பிரதிகளை இரண்டாவது வாசிப்புக்கு உட்படுத்திய பொழுது, எனக்கு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரு தமிழ் இளைஞனின் வாழ்க்கையை சித்திரிக்கும்; ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்பு கொண்ட ஒரு நாவல் கிடைத்தது.
2.இப்படைப்புப் பிரதியின் கதைச் சுருக்கம்;
வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட கொடூரங்களை நேரில் கண்ட ஒரு சிறுவன் (மரநாய்கள்) ,வளர்ந்து கொழும்புக்கு வந்து பல்கலைக்கழத்தில் இணைந்து பயிலும் காலத்தில், நகரத்திலும் அவனது ஊரிலும் சிங்களவர்கள் தமிழர்கள் மீது கொண்டிருந்த குரோதம், கண்காணிப்பு, சந்தேகம் ஆகிவற்றின் காரணமாக, அவனும், அவனது நண்பர்களும், அவனது தம்பி போன்றவர்களும், அவர்கள்; தமிழர்கள் என்ற ஒரே காரணமாக கைது செய்யப்படுகிறார்கள்;, காணாமல் போகிறார்கள்.(கண்ணீரினூடே தெரியும் வீதி, சிவா, ஒரு சுதந்திர நாள்) இவ்வாறான சூழலில் அவன் தன் படிப்பை முடிந்து வேலைத் தேடி அலைகிறான்.(இவன்)கல்வித்துறையில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. அந்த வேலையின் பொழுது கல்வி சம்பந்தமான கருத்தரங்குகளில் கலந்து கொள்கிறான்.(வழிகாட்டிகள்) அதே வேலையில் இருக்கும் பொழுது, அவனுடன் பணி புரியும் சிங்கள நண்பர்களுடன் மலேசியாவுக்கு மேற்படிப்புக்காக போகிறான். அங்கும் சேர்ந்து- உண்டு உறங்கிய சிங்கள் நண்பர்கள் மனதில் இருக்கும் தமிழர்கள் மீதான குரோதம் தொடர்கிறது. அவனுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் சிங்கள நண்பனின் பிள்ளை கொழும்பில் சுகவீனம் காரணமாக இறந்து போக, அவன் கொழும்பு திரும்ப, இவனும் அவனது சக நண்பர்களும் ஒடியாடி ஏற்பாடு செய்ய, கொழும்பு விமானம் நிலையம் தாக்கப்பட்டதன் காரணமாக, அந்த சிங்கள நண்பன் இலங்கைக்கு திரும்ப முடியாமல் போக, அதனால் குழப்பி போகும் அந்த சிங்கள் நண்பன் தமிழர்கள் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை குரோதத்தை வெளிப்படுத்துகிறான்.(இரட்டை கோபுரம்) மலேசியாவிருந்து நாடு திரும்பிய பின் ஒரு சந்தர்ப்பத்தில, நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் அவன் பயின்ற பாடாசாலை பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்கிறான்.(கூட்டத்தில் ஒருவன்) தொடர்ந்து அவன் பணி புரியும் அலுவலகத்தில் சக சிங்கள ஊழியர்களால், அவன் தமிழன் என்ற காரணத்தால் தொடர்ந்து அவன் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதும் தொடர்க்கிறது. ஒரு முறை அவனது மகனுக்கு சுகமில்லாம் போக, அவனை நவலோகா
வைத்தியச்சாலை அழைத்துச் செல்ல, அந்த நேரத்தில் அப்பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதன் காரணமாக வீடு திரும்ப, அந்த பகுதியில் ஆட்டோ தேடி அலைகிறான். மறுதாள் அலுவலகம் திரும்ப, நேற்று அவன் வேலைக்கு வராமல் விட்டமையும், நவலோகா ஆஸ்பத்திரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பின் பொழுது இவன் ஆட்டோ தேடி அப்பகுதியில் நடமாடியதை அவனுடன் பணி புரியும் சக சிங்கள ஊழியர்கள் சிலர் கண்டமை ஆகிவை இணைக்கபட்டு யாரோ பொலீஸுக்கு தெரிவிக்க அலுவலகத்தில் அவன் கைது செய்யப்படுகிறான்.(இடைவெளி)
3. முகுந்தனின் பிரதிகள் பேசும் விடயங்கள்
மேற்சொன்ன வரிசையில் என் வாசிப்புப் பார்வையில் ஒரு நாவலாக கட்டமைக்கபட்ட் இக்கதை பிரதிகளில் முகுந்தன் பின் வரும் விடயங்களை பற்றி பேசி என தெரியவருகிறது.
1. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் சிங்கள் மக்கள் எக்காரணம் கொண்டும்; தமிழ் பேசும் மக்களை நம்புவில்லை.என்னதான் கூட படித்து ஒரே அறையில் தங்கி, உண்டு உறங்கினாலும் சந்தேக கண்ணுடன்தான பார்த்தார்கள் (கண்ணீரினூடே தெரியும் வீதி, சிவா, ஒரு சுதந்திர நாள், இரட்டை கோபுரம்,இடைவெளி);
2. இத்தகைய காரணமாக இந்த நாட்டு சிங்கள் மக்கள் தம் பிள்ளைகளை போருக்கு பலி கொடுத்த து போல் வட-கிழக்கு மக்கள் தம்பிள்ளைகளையும் பறி கொடுத்து இருக்கிறார்கள் கண்ணீரினூடே தெரியும் வீதி, சிவா)
3. கல்வித்துறையில் மற்றும் அரச நிர்வாகத்தில் போலித்தன்மை, பகட்டுத் தன்மை, சுயநலம் (வழிகாட்டிகள்)
4. வேலை இல்லாத இளைஞர்களின்; மனோநிலை, அதனை சமூகம் அர்த்தப்படுத்தி கொள்ளும் விதம்;.(இவன்)
5. கலை இலக்கியத்துறையில் மலிந்திருக்கும் போலித்தன்மையை எடுத்து காட்டுதல்(போகிற போக்கில் 'இவன்' பிரதியிலும்,முக்கியமாக பேசும் விடயம் என்ற வகையில் 'சின்னமாமா' எனும் பிரதியிலும்)
6. உயர் வர்க்க, மத்தியத் தர வர்க்க சமூகங்களில் வளர்ந்திருக்கும் பகட்டுததன்மையை, போலிமையை எடுத்துக் காட்டுதல்(கூட்டத்தில் ஒருவன்)
7. இந்திய இராணுவம்; வட-கிழக்கை ஆக்கிரமித்த பொழுது, தமிழ் பேசும் மக்கள் அனுபவித்த் இன்னல்கள்(மரநாய்கள்)
8. தமிழனே தமிழனுக்கு உதவாத நிலை, தமிழர்களுக்கு சிங்கள சகோதரர்கள்; உதவிய நிலை (;ஒரு சுதந்திர நாள்)
இவ்வாறாக முகுந்தனின் இத்தொகுப்பு கதை பிரதிகளை புதிய ஒழுங்கு அமைப்பில் வாசித்து மேற்கூறிய கருத்து நிலைகளை நான் கிரகித்துக் கொண்டாலும், இத்தொகுப்பிலுள்ள இடம் பெற்றுள்ள 'சின்னமாமா' என்ற கதைப் பிரதி, நான் சம்பவங்களின் அடிப்படையில் ஒழுங்கு அமைத்;;த வரிசைப்படி பார்த்தால்; அக்கதைப் பிரதி இறுதியாக மேற் கூறிய கதைச் சுருக்கத்திங் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்பிரதியை முற்றும் முழுதுமாக் தவிர்த்து 'இடைவெளி' என்ற பிரதியுடன் அந்த வரிசையை முடித்து, அப்பிரதிகளை ஒரு நாவலாக இணைத்து வாசித்த பொழுது, அன்றைய யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞன் ஒருவனின்; வாழ்வியலின் யதார்த்தத்தை தாக்கதுடன் சொல்லி முடிக்கின்ற ஒரு நாவலை அப்பிரதிகளின் அத்தகைய இணைவு உறுதிச் செய்தது.

அது மட்டுமல்லாமல் அன்றும் சரி, இன்றும் சரி, இன்னும் தீராத பிரச்சினையாக இருக்கின்ற தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையின் நீட்சியினை, அவனது கைதுடன் முடிக்கின்ற அப்பிரதிவுடன் நான் ஒழுங்கு அமைந்த வரிசையானது, நான் மேலே குறிப்பிட்டது போல் அன்றைய யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞன் ஒருவனின்; வாழ்வியலின் யதார்த்தத்தை தாக்கதுடன் சொல்லி முடிக்கின்ற ஒரு நாவலை உறுதிச் செய்த்ததோடு, வாசக மனதில் தொடர்ந்து அந்த நாவல் ஒடிக் கொண்டிருக்கும் ஒரு சூழலை தொடக்கி விடுகிறது.
4. இப்பிரதிகள் எழுப்பிய ஆச்சியத்துடான ஒரு கேள்வி
முகுந்தனின் இப்பிரதிகளை வாசித்த பொழுது பிரதான ஒரு கேள்வி எழுந்தது. 'அவன்'அதாவது நாம் உருவாக்கிய நாவலின் கதாநாயகன், அவனுடைய கணிசமான வாழ்வுப் பகுதியை கொழும்பு போன்ற நகர பகுதியில் கழிந்து இருக்கிறான். கொழும்பு நகரத்தை எடுத்து கொண்டோமானால் எல்லா பிரதேசங்களையும் சார்ந்த மூவீன மக்களும்;, எல்லா மட்டத்திலும், (கல்வி, உத்தியாகம், வியாபாரம்) வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் முகுந்தனின் அவனின் வாழ்வு ஒட்ட்டத்தில் எந்தவொரு முஸ்லிமும் வராமல் போனது ஏன்? என்ற ஆச்சரியத்துடனான ஒரு கேள்வி என் வாசகப் பார்வையில் எழுந்தது.(இன உணர்வுடன் நான் இந்த கேள்வியை கேட்க வில்லை. இப்பிரதிகளின் யதார்த்த வெளிப்படாட்டில் ஏற்பட்டுள்ள விடுபடுதலை சுட்டி காட்டத்தான் இந்த கேள்வி. இப்பிரதிககளில் முஸ்லிம் பாத்திரங்கள் வரத்தான் செய்கின்றன. அன்வர், நவ்சாத், திருமதி அஸ்வர். என்ற மாதிரி. ஆனால் அவர்கள் வந்து போகின்ற அப்பிரதிகளில் கடந்து போய்கின்ற பாத்திரங்களாக இருக்கின்றார்கள் தவிர, அவனின் வாழ்வின்; அசைவாக்கத்தில் முக்கியப் பங்கிளை வகிப்பவர்களாக இல்லை.

5.இன்னும்.....
முகுந்தனின் இத்தொகுப்பு இடம்பெற்றுள்ள பிரதிகளை வாசித்து முடிக்கின்ற பொழுது, நாம் மேலே சொன்ன . முகுந்தனின் பிரதிகள் பேசும் விடயங்கள் பற்றிய குறிப்புக்களில்; எட்டாவது குறிப்பில் குறிப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள சகோதரர்கள்; உதவிய நிலையை சித்திரிக்க படைப்பாசிரியர் எடுத்து இருக்கும் 'வெளி' போதாது என்று நான் நினைக்கிறேன். அப்பிரிதிகளில் அத்தகைய பாத்திரங்களாக உப்புளும், ஜீனதாச அங்கிளும், பொர்ணாண்டோ அங்களும் அதுவும் தமிழனை காப்பாற்றாத கந்தசாமி என்ற தமிழர் வரும் சூழலில் வரத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களை மேலும் படைப்பாசிரியர் தேடி அவனின் வாழ்வில் இடம் பெற செய்து இருந்தால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த, தமிழ் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை சித்திரிக்கும் ஒரு படைப்பில் அக்காலகட்டம் முதல் இன்று வரை தொடரும் இனப்பிரச்சினைக்கு-முரண்பாட்டுக்கு அடிப்படையாக காரணமாக இருப்பது யார்? என்ற கேள்விக்கான பதிலை தேடுவதற்கு துணை சேர்த்திருக்கும்; என எனக்கு பட்டது.
மேலும், சமீப காலமாக போர்க் கால, ஈழத்து தமிழ் இலக்;கியப் படைப்புக்களை பயிலுகின்ற பொழுது, அப்படைப்புக்களில் அங்கதம் அப்பிரதிகளில் அங்காங்கே வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கு அந்தந்த படைப்பாளிகளின் நடை, குண இயல்பு ஆகியவைய காரணங்களாக சொல்லப்படலாம்;.அக்கூற்று மறுப்பதற்கில்லைத்தான். ஆனால் எனக்கு என்னவோ இக்காலகட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்வு மிகுந்த நெருக்கடி மிக்க துயரம் நிறைந்த ; வாழ்வாக இருந்த நிலையில், அத்தகைய நிலையை சித்தரிக்க வந்த படைப்புப் பிரதிகளில் அங்கதம் எட்டிப் பார்ப்பது என்பதற்;கு வேறு ஏதேனும் விசேடமான காரணிகள் இருக்குமோ? என்ற கேள்வி எனக்குள் எழுத்தான் செய்கிறது. அக்கேள்விக்கான பதில் அக்காலகட்ட பிரதிகளை ஆழமாக கட்டு உடைப்புக்கு உட்படுத்தும் பட்சத்தில் கிடைக்கக்கூடும் என எனக்குப் படுகிறது. முகுந்தனின்; இத்தொகுப்பிலும் இடைக்கிடையே எட்டிப்பார்க்கும் அங்கதம்; மேற்குறித்த விடயத்தை இங்கு என்னை பேச வைத்திருக்கிறது.
6.முடிவாக....
மொத்தத்தில், 80களுக்கு பின்னான ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் கொண்டிருக்கும் போக்கினை கணிசமான அளவுக்கு யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞன் ஒருவனின் வாழ்வை பின் புலமாக கொண்டு சிறுகதைப் பிரதிகளாக தந்து, புதிய வாசிப்பில் அச்சிறுகதைப் பிரதிகளை ஒரு நாவலாக வாசிக்க முடிக்கின்ற ஒர் அனுபவத்திற்கு வித்திடும் ஒரு புனைவுத் தொகுப்பை தேவமுகுந்தன் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' எனும் தலைப்பில் தந்திருப்பது, 80களுக்கு பின்னான ஈழத்து தமிழ் பேசும் சமூகத்தினரின் இளையத் தலைமுறையினரின் வாழ்வியலை பற்றி பேசும் ஒர் இலக்கிய ஆவணத்தை எமக்கு கிடைக்க செய்து இருக்கிறது.
அத்தோடு இத்தொகுப்புக்கான 'கண்ணீரினூடே தெரியும் வீதி' என்ற தலைப்பும், ஈழத்து தமிழ் பேசும் சமூக் இளையத் தலைமுறையினரின் வாழ்வு என்பது, கண்ணீருடன் கூடிய நீண்டதொரு பயணத்தை தொடர்க்கின்ற ஒரு வீதியாகவும் இருந்திருக்கிறது என்பதை குறியீடாக பேசியும் இருக்கிறது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
நன்றி : மனமோகி ( டிசம்பர் 2012)
No comments:
Post a Comment