காலச்சுவடு பதிப்பக வெளியிட்ட எனது "கண்ணீரினூடே தெரியும் வீதி..." சிறுகதைத் தொகுதி பற்றிய மதிப்பீடுகள் விமர்சனங்கள் இப்பகுதியில் இடம்பெறும்- தேவமுகுந்தன்
Friday, December 15, 2023
வி. அபிவர்ணா
"கண்ணீரினூடே தெரியும் வீதி"சிறுகதை பற்றிய எனது ஆய்வுரை
...........................................................................
காலச்சுவடு என்ற அச்சகம் பற்பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொண்டு வருவது நாம் கேள்விப்பட்ட விடயமாகும்.அந்த வகையில் திரு தேவமுகுந்தன் அவர்களின் பிரசவமாக "கண்ணீரினூடே தெரியும் வீதி "என்ற தொகுப்பானது தன்னகத்தே பத்து கிளைகளை உள்ளடக்கி 102பக்கங்களில் காலச்சுவடு அச்சகத்தின் வாயிலாக வெளிவந்தது.
தேவராசா முகுந்தன் என்ற சொந்தப்பெயர் கொண்ட தேவமுகுந்தன் தன்னுடைய பெரும்பாலான கதையம்சங்களை நிர்மலன் என்ற புனைபெயரிலே வரைந்திருக்கின்றார்.இவர் யாழ் மண்ணை பிறப்பிடமாகக் கொண்டவர்.எனினும் கடந்த இருபது வருடங்களாக கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.நம் தாய் நாடான இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாக பணிபுரிந்து, தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.
கதாசிரியர் அவர்கள் "கண்ணீரினூடே தெரியும் வீதி"இந்த சிறுகதைப்படைப்பினை 1997இல் தன்னுடைய இருபதாவது வயதில் மரணித்த அன்புச்சகோதரன் நிர்மலன் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார் என்பது நாமறிந்த உண்மை.
கதாசிரியர் அவர்கள் தன்னைப் பாதித்த விடயங்களை நிர்மலன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளாக தனதுரையில் எடுத்தியம்பியுள்ளார்.போர்க்கால நெருக்கடிக்குள் சிக்கி அவலப்படும் பல இடங்களிலும் தங்கியிருந்த பலரும் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை சதாவும் தம்முடன் வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலை அன்று காணப்பட்டது.
அவ்வாறாக மக்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்கள் இத்தொகுப்பின் ஊடாக மிகச்சிறப்பாக வடித்துள்ளார்.அது பற்றி பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் பின்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
1980களுக்குப் பின்னரான இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பொருள் இனமுரண்பாடும், யுத்த வடுக்களுமென்றால் மிகையல்ல.இன முரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்த சூழல் தனி மனிதர்களின் வாழ்வு, அவர்களின் உணர்வுகளை நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கும் என்பது தான் கடந்த முப்பதாண்டு காலப்பகுதியில் எழுந்த பெரும்பாலான படைப்புகள் பேசிநிற்கின்றன.
"கண்ணீரினூடே தெரியும் வீதி "என்ற சிறுகதையானது இலங்கையின் போர்க்காலத்தில் எங்கும் மரணங்கள் இரத்தப்போர்வைகள்,உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவையாகும் என்பதை இப்படைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.
தன்னுடைய சகோதரனின் மரணம் நிகழ்ந்திருக்கும் போது எதிர்வீட்டு சிங்கள இராணுவ சகோதரர்கள் இறந்த விடயத்தையும் மையப்படுத்தி இச்சிறுகதையை நகர்த்திச் செல்கின்றார்."வழிகாட்டிகள்"என்ற கதையினை அதிகாரிகளின் அசமந்தப்போக்கை படம்பிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் போக்கையும் கூட்டங்களில் கலந்து கொண்டு தமக்குத்தான் எல்லாம் என்பதுபோல போக்காக நடப்பவர்களின் சாயம் வெளுக்கப்படுகின்றது.ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் புறூப் பார்த்து முடிக்காத இந்திரனும் இன்னும் வேலையிருப்பதாய் கூறுகின்றார்.இந்திரன்,அதற்கு அந்த அதிகாரி கூறும் பதில் இது,"அது அவசரமில்லை ஆறுதலாய்ச்செல்லுங்கோ".என்ர கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கின்றான்.நீர் புறூப் பார்த்த பேப்பர்களை தந்தீர் என்றால் நான் அதைப் புத்தகமாய் கட்டிப்போட்டு அவனுக்கு படிப்பிச்சுப்போடுவன்"என்று அழகாக பதிவு செய்திருக்கின்றார்.
மேலும் இப்படைப்பை நோக்குமிடத்து "இடைவெளி "என்ற கதை இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நிலவிய சமாதான காலம் முடிவடைந்து குண்டுவெடிப்புகள் மீண்டும் ஆரம்பித்திருந்த காலப்பகுதியில் ,தலை நகரில்பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக. இருக்கின்ற. அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகின்றார் என்பது இச்சிறுகதைப்படைப்பின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
யுத்தநிலையானது எப்போதும் அடுத்தவர் மீதான தன்னம்பிக்கையை உருவாக்கின்றது.அதுவே இன விடுதலைப்போராகும் போது தவிர்க்கவே முடியாமல் இனங்களுக்கிடையிலான. ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் சிதைவடைத்து விடுகின்றது.
இப்படைப்பில் வருகின்ற ஜெகன் எனும் கதாபாத்திரங்களுக்கு தான் அலுவலகத்திற்கு சமூகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிக உயர்வாக இருப்பதற்கான காரணம் என்னவென்பது புரியவேயில்லை.எழுமானமாய் நடக்கும் இந்நிகழ்வுகள் பற்றி ஆரம்பத்தில் பகிடியாக கதைக்க சிங்களவர்கள் மெல்ல மெல்ல கோபப்படவும் சந்தேகம் கொள்ளவும் தொடங்குகின்றார்கள்.லண்டனில் ஒரே அறையில் இரண்டு வருடம் தங்கியிருந்து நெருக்கமான நட்பு கொண்டிருந்த. விக்கிரம என்பவன் ஜெகன் லீவில் நிற்கும் நாட்களில் தனது பிள்ளை பள்ளிக்கூடம் செல்லாது நிறுத்தவேண்டும்.அப்பாத்திரம் பின்வருமாறு கூறுகின்றது.குறுந்தாடி வளர்த்து,பொதுவுடைமை பேசித்திரிந்த,புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் A9பாதையூடாக செல்கையில்போரினால் அழிவடைந்த தமிழர்கிராமங்களைப் பார்த்து கண்கலங்கிய பிரேமசிறி என்பவன் ஜெகன் ஏன் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதை பொலிஸ்காரனின் தொனியுடன் கேள்வி தொடுக்கின்றான்.
ஏழு வருடகாலமாக தொடர்ந்துஅலுவலகத்தில் ஒன்றாக சிற்றுண்டி நிலையத்திற்குப் போய் "தேனீரும்அப்பமும் உண்டஜெகனுடன்நெருங்கிப் பழகியதன் காரணமாக அல்லது பெரிய மீசை வைத்திருந்ததாலோ அலுவலகத்திலிருந்த வேலைகளையும் பொருட்படுத்தாதது "தெமிளா"என்றுசெல்லமாக அழைக்கப்பட்ட ஜெயந்த என்பவர்கூட, இவன் வழமைப்போல சிற்றுண்டிச்சாலைக்குப்போக. அழைக்கின்ற போது "மறுதலிக்கின்றான்.
இந்த மூன்று கதாபாத்திரங்களும் ஜெகனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பது ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தப்படுகின்றது.ஆனால் கொழும்பு மாநகரில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற நாட்கள் சிலவற்றில் ஜெகனும் அலுவலகத்திற்கு வராமல் இருந்தான் என்ற காரணத்தால் அவர்கள் தமிழனான ஜெகனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள்.
அந்த. இரண்டு குண்டு வெடிப்புகளுக்கு முன்பும் கூட நிலைமை சுமுகமாக அலுவலகத்தில் இருந்து தமிழருக்கான சம உரிமை நிலவியதாக அறியமுடிகின்றது.ஆனால் சமவுரிமை நிலவியது என்று கூற இயலாது.நலன்புரிச் சங்க பொதுக்கூட்டத்தில் கண்ணீரில் பத்திரிகை வாங்கும் போது ஒரு தமிழ் பத்திரிகையேனும் வாங்கும்படி வேண்டுகின்றார்.அதிலும் மூன்று சிங்கள பத்திரிகைகளை வாங்குகின்றனர் என்பது இக்கதையின் ஊடாகத் தெரிய வருகின்றது.அங்கு பணி புரிபவர்களில் 30சதவீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழர்களாக காணப்பட்டார்கள்.பத்திரிகைகளுக்காக பணம் அனைத்து ஊழியர்களிடம் இருந்து அறவிடப்பட்டது.ஆகவே தமிழ்ப் பத்திரிகைகளையும் வாங்கவேண்டும் என்பது தானே முறையென்பது ஜெகன் தரப்பு நியாயமாகக் காணப்பட்டது.ஆயினும் "தமிழர்ளுக்கு சிங்களமும் ஆங்கிலமும் தெரியும்"எனவே தமிழ்ப்பத்திரிகை வாங்குவது வீண் செலவாகும்.அதன் பின்னர் ஜெகன் ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து தமிழ்ப்பத்திரிகை வாங்காவிட்டால் தாம் பத்திரிகை வாங்க பணம் தரமாட்டோம் என்று போராடி பிரேமசிறி, ஜெயந்த என்ற அவன் நண்பர்களும் ஆதரவு தர தமிழ்ப்பத்திரிகை வாங்க சம்மதித்து அரசின் ஊதுகுழலாய் இருக்கும் பத்திரிகையொன்று வாங்கப்படுவதாக அறியமுடிகின்றது.சம்மதம் தெரிவிக்கின்ற காலகட்டத்தில் கூட்டத்தின் பின்னாலிருந்து ஜெகன் பயங்கர வாதியென்ற குரல் எழுப்பப்படுகின்றது.பேரிடரான சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரண்டு நாள் சம்பளத்தை வழங்குவது என்று கூட்ட நிகழ்வில் தீர்மானிக்கப்படுகின்றது.இதன்போது நிதியும் திரட்டப்படுகின்றது.
அவ்வாறு திரட்டப்படுகின்ற நிதி அனைத்தையும் சிங்கப் பிரதேசங்களில் யுத்தத்தினால் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு மட்டும் அவ்வுதவி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.இவ்விடயத்தையறிந்து அம்பாறை ,மட்டக்களப்பு,காத்தான்குடி போன்ற தமிழர் வாழும் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.தமிழ்பேசும் உள்ளங்களுக்கும் அவ் உதவி வழங்கியே ஆகவேண்டுமென ஜெகன் வலியுறுத்தினார்.இருப்பினும் அத்தரப்பிடம் சம்மதம் வழங்கப்படவில்லை.அப்படி இக்கோட்பாட்டினை நிறைவேறாவிடின் சுனாமிபேரிடர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை தமது மாதாந்த சம்பளத்தில் இருந்து கழிக்க வேண்டாம் என்று தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று காரியாலத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.இதையறிந்து அவர்களில் ஒருவர் "நீ முழு இனவாதி "என்று திட்டுகின்றார்.தமிழர்கள் ஒரு பயங்கரவாதியாகவோ அல்லது இனவாதியாகவோ வருவதற்கு தனது உரிமைக்காக குரல்கொடுப்பதே முக்கியமாகக் கருதப்பட்டது.
இப்படைப்பின் மூலம் சிவா என்ற கதையம்சம் சந்தேகத்தின் பெயரில் கைதி ஆகி ஆறு ஆண்டுகளின் பின்னர் விடுதலையாகி வருகின்ற ஒருவருடைய கதை முன்னர் கூறியது போன்று யாரையும் நம்பாதே!சக நபர்களை சந்தேகப்படுகின்ற ஒரு வழக்கம் நிலவிய போர்ச்சூழலில் இக்கதை அமையப்பெற்றுள்ளது.<சிவா என்ற மாணவன் பல்கலைக்கழகத்தில் அதிகம் சிங்கள நட்புக்களின் வட்டாரத்தையுடையவனாகக் காணப்பட்டான்.சிங்களப்பெண்ணொருத்தியை காதல் வயப்படுகின்றான்.ஒருநாள் தனது பாடசாலைக்கால நண்பன் ஒருவனை வழியில் கண்டு சைக்கிளில் ஏற்றிச்செல்லுகின்ற நண்பனின் பையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புத்தகம் இருந்ததாகக் கூறி இருவருக்கும் கைது செய்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.அதைத்தொடர்ந்து சிவா கல்வி கற்று வந்த பல்கலைக்கழகவளாகத்தினுள் பொலிஸார் நுழைகின்றார்கள்.ஒவ்வொரு மாணவரது அடையாள அட்டையையும் பார்த்து தமிழர்கள் அனைவருக்கும் விசாரணைக்கென்று கைது செய்யப்படுகின்றார்கள்.இக்கைது நடவடிக்கை நடைபெறுகையில் அதே இடத்தில்இருக்கும்"செம்மாணவர் அமைப்பு"தலைவர் கித்சிறி என்பவன் தொலைக்காட்சியில் ஜெயசூர்யாவும் களுவித்தாரணவும் வெளுத்துக்கட்டுவதைப் பார்த்து கைதானவர்கள்இறுதியில் விடுதலைப் பெறுகின்றார்கள்.
சிவா ஆறு ஆண்டுகளின் பின்பு நிரபராதி என்று அனைவராலும் பேசப்பட்டு விடுவிக்கப்படுகின்றான்.ஆனாலும் அவனைக் காணும் பழைய நண்பர்கள் அவனுடன் கதைப்பதை தவிர்த்துக்கொள்கின்றார்கள்.தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா செல்வதற்கு முயல்வதாகக் கூறி சிவா அவ்விடத்திலிருந்து விடை பெறுகின்றான்.அதன் பின்பு சிவாவை தொடர்பு கொள்ள முயலும் கதை சொல்லிக்கு தொடர்பு கிடைக்கவில்லை.சில நாட்களின் பின்பு காணாமல் போனோர் உறவினர் சங்கம் நடாத்திய ஊர்வலத்தில் சிவாவின் அடையாளத்தையும்,புகைப்படத்தையும் ஏந்திக் கொண்டு வெள்ளைச் சேலையணிந்த வயதாகிய மங்கையொன்று செல்வதைத் தொலைக்காட்சியில் பார்த்ததாக இன்னொரு நண்பன் ஊடாக தெரிவிக்கின்றான்.இச்சிறுகதையில் சந்தேகத்தின் பெயரில் நிகழ்ந்த கைதுகளும், பரவலாக இடம்பெற்ற காணாமற்போதல்களும் கூறப்பட்டுள்ளன.அத்துடன் சந்தேகத்தின் பேரில் என்று கைது செய்யப்பட்ட சிவாவின் சகபாடி வளாகத்தில் இருந்தவர்கள் சிங்களவர்கள்.அவருடைய காதலி கூட சிங்களபெண்தான்.இருந்தும் அவர்கள் யாருமே விசாரணைக்கு உட்படுத்தவில்லை.ஆனால் அவனது கைதினை தொடர்ந்து வளாகத்தினுள் நுழையும் பொலிஸார்கள் முகத்தையும் அடையாள அட்டையையும் பார்த்து தமிழர்கள் அனைவரையும் தனிவரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றார்கள்.
இனப்படுகொலை ஒன்றுக்கான நிலைகளில் மிக ஆரம்பமாக இருந்த நிலையில் ஒன்றாக ஒருவரின் இனம்,மதம், தேசியம் போன்ற அடையாளங்களை அறியும் பொருட்டு அடையாள அட்டைகளை பார்வையிடல் அவர்களை தமர்×பிறர் என்று இந்நிலையை குறிப்பிடுகின்றார்.இன்று வரை ஈழத்தில் தொடரும் இந்நிலையை இக்கதை உணர்த்துகின்றது.சிங்களவர்,தமிழர், முஸ்லீம் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது என்று ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்த ஒரு சுதந்திர நாளில் கொழும்பில் வாழ்ந்த தமிழ் இளைஞனின் நாள் எப்படி இருந்தது என்பதே ஒரு சுதந்திர கதையாகும்.
அவன் உணவு வாங்க கடைக்குச் செல்லும் போது தமிழன் என்ற காரணத்தால் அரைமணி நேரம் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக அவன் உணர்கின்றான்.இரண்டு வருடங்களாக அவன் உணவுண்ட லக்சுமி பவன் கடையில் பணியாற்றிய மலையக இளைஞர்கள் பொலிஸ் மூலம் தடுத்து வைக்கப்படுகின்றார்கள் ஒரே நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டும் பதிவு செய்யும் பொலிஸ் நடைமுறையை நினைத்து வெறுப்புறுகின்றான்.இனிச்சாப்பாட்டுக்காய் அலைந்து கைதாகபடுவதை விட காலையில் சாப்பிட்டு மிச்சம் வைத்த பழைய பாணைச் சாப்பிடுவது நல்லதென்ற முடிவுக்கு இறுதியில் வருகின்றான்.தான் வாழும் நாட்டின் சுதந்திர நாளில் கூட தான் பிறந்த இனத்தின் காரணமாக கடுமையான ஒழுக்கமும், ஒடுக்குமுறையும் நிலவுகின்ற அவனால் காட்ட முடிந்த அதிக பட்ச எதிர்வினை அதுவாக அமைகின்றது.
இத்தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் என் தனிப்பட்ட அக்கறையில் மிக முக்கியமான விடயத்தைப் பேசுகின்ற சிறுகதை"வழிகாட்டிகள்"என்பது.
இலங்கையில் இலவசக் கல்விமுறைமை உலக அளவில் கூட சிறப்பான ஒன்றாகும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கையில் எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டமும் பாடப்புத்தகமும் தான் இருந்தன.
அண்மைக்காலமாக கல்வியானது தனியார்துறைகளிடம் மெல்ல மெல்ல கைமாறி வருகின்றது.ஆனால் கல்வி முறைக்கு ஒழுங்கான திட்டம் இருந்தும் தமது மெத்தனத்தால் அதை செயலிழக்கவும் சரியாகச் செய்யவும் முடியாமல் செய்தவகள் பலர்.இக்கருத்தை இக்கதையினூடாக அறிந்து கொள்ள முடிகின்றது.குறிப்பாக கல்வி அதிகாரிகள் உள்ளனர்.
சுருங்கக் கூறின் சாகித்திய விருதைப்பெற்ற இந்நூல் வாசிப்போரின் மத்தியில் சிறந்த அனுபவத்தை பெற்றுத் தரும் என்பதில் ஐயப்பாடில்லை.
இதுவும் ஓர் எழுத்தாளரின் பேனை கூறும் ஆய்வெறக்கூறி இந்நூல் வாசகர் மனதை தொட்டுச்செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.
வி.அபிவர்ணா-முல்லைத்தீவு
Subscribe to:
Posts (Atom)
