Monday, December 24, 2012

நெடுந்தீவு மகேஷ்


கண்ணீரினூடே தெரியும் வீதி

இனமுரண்பாடுகளின் வெளிப்பாடுகள் நாம் எதிர்பாராத வகையிலும், எதிர்பார்த்திராத உறவுகளிடத்திலும் இருந்து விரிந்தெழும் போது எமது மனம் அழுகின்றது. நம்பிக்கை சிதைவுறுகின்றது.

இச்சிறுகதை நூலில் கண்ணீரினூடே தெரியும் வீதி எனும் சிறுகதையை முதலாகக் கொண்டு பத்துச் சிறுகதைகளை தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியீடாகத் தந்துள்ளனர். கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவமுகுந்தன் தன்னை அகப்படுத்திக் கொண்டு தனிமையில் அனுபவித்த இன்னல்களையும், ஏமாற்றங்களையும் வாசகரின் உணர்வுகளை உசுப்பும் வகையில் தமிழ் இனிக்கச் சிறந்த கதைகளாக்கிக தந்துள்ளார்.

அவரது அநேகமான சிறுகதைகள் அவர் தாம் தொழில் சார்ந்துலவிய களத்தையும் உறவுகளைம் வெளிப்படுத்துகின்றன.

இவன் தொழில் தேடி அலைந்தே நாட்களை ஓட்டும் ஒருவன். அவனை அறியாதோர் பார்வையில் அவன் கேள்விக்குரியவனாகிறான். வேலைதேடி அலைம் இவனின் விரக்திக் கோலத்தின் வெம்மைகை; கூறும்கதையிது. நகைச்சுவை இழையோட கதை இவனின் நடத்தைகளை விளக்குகின்றது. அருமையான சிறுகதை.

வழிகாட்டிகள் எனும் சிறுகதை கல்விப்புலத்தில் கடiமாற்றுவோரின் சுயநலமும் பேராசைகளும் கடமைக்குப் புறம்பாக மேலெழுந்து அவர்களின் பதவிகளை கேலிசெய்யும் உண்மையைப் பகிரங்கப்படுத்துகின்றது. உண்மை சுடுகின்றது.

புதிய தலைமுறை எழுத்தாளர்களுள் பிரகாசிக்கும் ஒருவராக முன்னணியில் தோன்றும் தேவமுகுந்தன் திறந்த பல்கலைக்கழக கல்வித்துறை விரிவுரையாளராகப் பணி தொடர்கிறார். அருமையான பத்துச் சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பின் ஊடாக எழுத்துலகில் இமயமாக எழுந்து நிற்கின்றார். அவர் தனது தொடரும் ஆக்க இலக்கியப் பணியின் மூலம் மேலும் பல புதிய எண்ணக்கருக்கள் முகிழ்த்தெழ நவமான சிறுகதைகளை வெளிக்கொணருவார் என நம்புவோம்.

நெடுந்தீவு மகேஷ்

நன்றி : சுடர் ஒளி 19. 12.2012- 25.12.2012

No comments:

Post a Comment