கண்ணீரினூடே தெரியும் வீதி- தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு
புனைவிலக்கய உலகின் கவனத்ததைப் பெற்றுள்ள இளம் எழுத்தாளர் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதைத் தொகுப்பை தமிழக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் பத்துச் சிறுகதைகள் அடங்குகின்றன.
இவை தினக்குரல், கலைமுகம், யுகமாயினி, காலம், ஞானம், ஈழநாதம் ஆகிய ஏடுகளில் வெளிவந்தவையாகும். ஈழத்துப் போர்க்காலச் சூழல், சமகாலத்துத் தமிழ் வாழ்வின் சீர்கேடுகள், அரச பணியாளரின் பொதுசனத்தை ஏமாற்றும் பம்மாத்துக்கள் என்பன கதைகளில் தீட்சண்யமான பார்வையோடு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. சிலவற்றில் போரின் விதைப்புகளை சிங்களச் சூழலிலும் மலேசியப் பிரதேசத்திலும் வைத்துச் சொல்லியிருப்பது அவற்றுக்கு சிறப்புப் பெறுமானத்தை ஏற்படுத்துகின்றது.ஐ.சாந்தன் போன்ற சில ஈழத்துக் கலைஞர்கள் தேசிய இலக்கிய முன்னெடுப்பில் ஏற்கனவே இத்தகைய புனைகதைகளை ஆக்கியுமிருப்பதை வாசகர்கள் மறந்திருக் மாட்டார்கள். ஆனால் அவைகளுக்கு சற்று எதிர்வினையாக தமிழிய உணர்வு இத்தொகுப்பாசிரியர் தேவமகுந்தனின் சிறுகதைகளில் வேரோடியுள்ளதை ஆழந்த வாசிப்பு உணர்த்தும்.
மாணவருக்கு இலவசப் பாடநூல் வெளியீடு சம்பந்தமான அதிகாரிகள் மாநாடு பற்றிய சிறுகதை வழிகாட்டிகள் இலவசக் கல்விக்கு மறைகாலம் நெருங்கிவிட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த இலவசப்பாடநூல் வழங்களுக்கு எப்போது கோவிந்தாவோ யாமறியோம். கல்வியதிகாரிகளின் இந்த மாநாடுகள் அவர்களின் வர்க்க நலன்களைப் பெசுவதற்காகன ஒன்றுகூடல்னெ;பதை சாதாரண வாசகனும் உணரக் கூடியதாக இக்கதை தத்ரூபமாகப் புனையப்பட்டுள்ளது.
இந்த மண்ணில் வாழ்ந்து நிலைமைகளை அறிந்தவர்களைக் காட்டிலும் புகலிடத்தில் வாழும் மூர்த்திகள் வழிபடத்தக்கவர்கள் தானென்பதை கூட்டத்தில் ஒருவன் கதை சிந்திக்க வைக்கின்றது.
கற்று மேலோங்க வைத்த கல்லூரியில் போஷாக்கின்மையால் மாணவர்கள் மயங்கி விழுவதாகவும் அவர்களுக்கு போஷாக்கான உணவளிக்க நிதிகோரி கல்லூரி அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்கு ஈமெயில் தகவல் கொடுக்கின்றார். இதை ஆலோசிப்பதற்கு கிறிஸ்மஸ் சூழலில் ஆங்கிலேயன் இன்னும் எம்மோடு இருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆடம்பர ஐந்து நட்சத்திரவிடுதியொன்றில் பழைய மாணவரின் ஒன்றுகூடல் ஏற்படுத்ப்படுகின்றது. விலையர்ந்த மதுபானங்கள் பரிமாறப்பட்டு பட்டினிச்சாவை எதிர்நோக்கும் மாணவருக்கு ரூபா 1300ஃஸ்ரீ க்கான காசோலையை அனுப்பத் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படியிருக்கும் சொந்த மண்ணில் வாழ்பவனின் கரிசனை? எனவேதான் சொன்னோம் புகலிட மூர்த்திகள் வழிபாட்டுக்குரியவர்களென.
வேலையற்ற பட்டதாரிnhருவன் வாழும் சூழலைக்கணிப்பிடும் விதத்தை 'இவன்' சித்தரிக்கின்றது. சின்னமாமா என்றசிறுகiதில் சின்ன என்ற சொல்லை மேல் குறியிட்டு மாமா சின்னத்தனங்களின் களஞ்சியம் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தில் நால்வரே காணப்பட்டதாக சிறுகiதில் பதிவுண்டு. தமிழருக்கு நால்வர் முக்கியமானவவர்கள்.அத்தூண்டுதலால் போலும் துயர் பகிர்தல் நிகம்வு நடத்தப்பட்டது. இது போன்ற சிறுகதைகள் இலக்கு வைக்கப்படும் எழுத்தாளர் வாழும்போதே வெளியாக வெண்டும். அது குற்றம் புரிந்த எழுத்தாளருக்கு எச்சரிக்கையாக இருக்கும். காலமான பின் வாசிக்கக் கிடைத்தால் வாழும் எழுத்தாளரை வாசகர்கள் மத்தியில் மதிப்பிறக்கம் செய்ய முயல்வார். படைப்பின் சமூகப்பயன்பாடே முக்கிமானது. இச்சிறுகதை மிகச் கச்சிதமாகப் பின்னப்பட்டுள்ளது.;
இததொகுப்பின் ஏனைய சிறுகதைகள் போர்க்காலச் சிறுகதைகள். இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் சுதந்திரம் பெற்றதன் உழைப்பகை; கொடுத்த தமிழர்கள் சேர் பொன் இராமநாதனின் உருசச் சிலைக்கு மலர் வளையம் வைத்து அதற்கு மாலையணிந்து கௌரவிப்பார்கள். இது கடந்த 64 ஆண்டுகளாக மறக்காது ஆட்சி அதிகாரம் பெற்றவர்கள் செய்யம் பணி ஆனால் இத்தினத்தில் தமிழன் அடையாள அட்டை, பொலிஸ் பதிவுப் புத்தகம் இன்றி வீதியில் வீதியில் நடமாட முடியாது. இதை ஒரு சுதந்திரநாள் என்ற சிறுகதை அறியப்படுத்துகின்றது. இதை வாசித்த போது அமரர் மு.தளையசிங்கத்தின் பெப்ரவரி 4 என்ற சிறுகதை நினைவில் நிறைந்தது.
சிங்கள யுவதி ஒருத்தி தமிழ் இளைஞன் ஒருவனோடு நேச உறவைப் பேணி தமிழனென அறிந்நதும் கருவேப்பிலையாக அவனைத் தூக்கி எறிகிறாள். இதைப்பற்றி மு.த. சாதி, சமயம், பாஷை என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லாத காதல் கோட்டைக்குள்ளேயே கையை வைக்கும் அளவுக்கு இலங்கையில் இனத்துவேஷம் வளர்ந்து விட்டது.
ஆக தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பின் சிறுகதைகள் இலக்கியத்தில் அவர் இலக்கியத்தில் அவர் சாதனை ஏற்படத்துவாரென்பதற்கு கட்டியம் கூறுகின்றது.
-சமரசன் ( மா.பா.சி)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete